
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி செல்வவிநாயகர் கோயிலில் வருடாபிஷேக பூஜை நடந்தது. இதையொட்டி நேற்று காலை 9:00 மணிக்கு யாக பூஜை நடந்தது. தொடர்ந்து செல்வவிநாயகருக்கு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் காட்சியளித்தார். பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை அருவியூர் வடக்குவளவு நகரத்தார்கள் செய்திருந்தனர்.

