/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குப்பை கொட்ட எதிர்ப்பு: நகராட்சி வாகனம் சிறை
/
குப்பை கொட்ட எதிர்ப்பு: நகராட்சி வாகனம் சிறை
ADDED : மே 16, 2024 06:18 AM
சிவகங்கை : சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகள் தினசரி 13.5 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. சேகரமாகும் குப்பை கடந்த காலங்களில் சிவகங்கை அருகே உள்ள சுந்தரநடப்பு கிராமத்தில் உள்ள சிவகங்கை நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது. அங்கு கொட்டப்பட்ட குப்பையால் சுகாதாரம் பாதிக்கப்பட்டதாக கூறி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
குப்பை கிடங்கை அகற்றக்கோரி சுந்தரநடப்பு மக்கள் நீதிமன்றம்சென்றனர். நீதிமன்றம் குப்பையை அங்கு கொட்ட தடை விதித்தது. அதன் பின்னர் சேகரமான குப்பையை கொட்ட இடமில்லாததால் ஆங்காங்கே கொட்டி குப்பைக்கு தீ வைத்து அழித்தனர்.
இந்நிலையில் நேற்று சிவகங்கை நகராட்சி சார்பில் மீண்டும் சுந்தரநடப்பு பகுதியில் குப்பைகளை கொட்டினர். ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசில் புகார் கொடுத்து சிவகங்கை நகராட்சி வண்டியை சிறை பிடித்தனர். நகராட்சி சார்பில் அங்கு கொட்டப்பட்ட குப்பை இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.