ADDED : ஆக 05, 2024 07:07 AM
சிவகங்கை : உலக சுற்றுலா தினத்தில் விருதுகள் பெற சுற்றுலா தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:
சுற்றுலா தொழில்முனைவோரில் வெற்றியாளர்கள், பயண ஏற்பாட்டாளர்கள், புதிய யுக்திகளை கையாள்பவர்களுக்குசுற்றுலா விருதுசெப்.27ம் தேதி தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது.
இதற்காக சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த பயண பங்குதாரர், விமான பங்குதாரர், சிறந்த தங்குமிடம், உணவகம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக உணவகம், படகு இல்லம், சுற்றுலாவை ஊக்குவிக்கும் சிறந்த மாவட்டம், சுத்தமான சுற்றுலா தலம் போன்று பல்வேறுவிருதுகள் வழங்கப்பட உள்ளன. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tntourismawards.com என்ற இணையதளத்தில்ஆக.,20 க்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரத்திற்கு மாவட்ட சுற்றுலா அலுவலர், காரைக்குடிக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
மேலும், விபரங்களுக்கு 89398 96400 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.