/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழடி அருங்காட்சியகத்திற்கு கூடுதலாக பணியாளர் நியமனம்
/
கீழடி அருங்காட்சியகத்திற்கு கூடுதலாக பணியாளர் நியமனம்
கீழடி அருங்காட்சியகத்திற்கு கூடுதலாக பணியாளர் நியமனம்
கீழடி அருங்காட்சியகத்திற்கு கூடுதலாக பணியாளர் நியமனம்
ADDED : மே 29, 2024 04:55 AM
கீழடி : கீழடி அருங்காட்சியகத்தில் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து கூடுதலாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கீழடியில் மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் ஆற்றங்கரை நாகரீகத்தை கண்டறிய அகழாய்வு 2015ல் பணிகள் தொடங்கப்பட்டு ஏராளமான பொருட்கள் கண்டறியப்பட்டன.
அதன்பின் தமிழக தொல்லியல் துறை அகழாய்விலும் பொருட்கள் கண்டறியப்பட்டு அதில் எடுக்கப்பட்ட பொருட்களை கீழடியில் அருங்காட்சியகம் 18 கோடியே 44 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உள்ளுர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் பொருட்டு தொகுப்பூதிய அடிப்படையில் ஆண்களும், பெண்களும் 15 பேர் வரை அருங்காட்சியகத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டனர்.
இவர்கள் அருங்காட்சியகத்தில் பொருட்கள் பாதுகாப்பு, மற்றும் பார்வையாளர்களை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தற்போது தொல்லியல் துறையினர் மாற்றுத்திறனாளிகளுக்கும் வாய்ப்பு அளிக்கும் பொருட்டும், கூடுதல் பார்வையாளர்கள் வருகை தருவதால் கண்காணிப்பதற்காகவும், கூடுதலாக ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அருங்காட்சியக பணியாளர்களின் எண்ணிக்கை இருபதாக உயர்ந்துள்ளது.