ADDED : மே 24, 2024 02:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: தென்திருப்பதி என்று அழைக்கப்படும் அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா சிறப்பாக நடைபெறும்.
இவ்வாண்டு, வைகாசி திருவிழா மே 15 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி சிம்ம, ஹனுமந்த, யானை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளினர். மே 20ம் தேதி திருக்கல்யாணம் நடந்தது.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. மே 26 தெப்பமும் மே 27 புஷ்ப பல்லக்கும் நடைபெறுகிறது.