ADDED : ஏப் 28, 2024 06:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை ஆயுதப்படையில் பணிபுரிந்த போலீஸ்காரர் சிவசங்கரன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிவகங்கை வ.உ.சி.தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரன் மகன் சிவசங்கரன் 38. இவர் கடந்த 2011ம் ஆண்டு போலீசில் சேர்ந்துள்ளார்.
தற்போது சிவகங்கை ஆயுதப்படையில் பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. ஆயுதப்படை குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.
நேற்று வீட்டில் தனியாக இருந்த சிவசங்கரன் மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.

