/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
போலீஸ் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய போலி போலீஸ் கைது
/
போலீஸ் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய போலி போலீஸ் கைது
போலீஸ் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய போலி போலீஸ் கைது
போலீஸ் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய போலி போலீஸ் கைது
ADDED : ஆக 21, 2024 01:44 AM

மானாமதுரை:சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த ஒருவருக்கு போலீசில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.28 ஆயிரம் பெற்று போலி பணிநியமன ஆணை வழங்கிய போலி போலீஸ்காரர் சிக்கினார்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா உழுத்திமடை கிராமத்தைச் சேர்ந்த நாகமலை மகன் நாக அர்ச்சுனன் 24. இவர் மானாமதுரை சிப்காட் ராஜேந்திரன் நகரில் வசிக்கிறார். இவர் மதுரை தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் போது ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அன்னைநகர் சாலமோன் ராஜா மகன் சேத்ரோவுடன் 25, பழக்கம் ஏற்பட்டது. திருச்சியில் போலீசாக வேலை செய்வதாகவும், நாக அர்ச்சுனனுக்கு போலீஸ் கேன்டீனில் வேலை வாங்கி தருவதாகவும் கூறி ரூ.28 ஆயிரத்தை சேத்ரோ பெற்றார்.
இதற்காக ஆக., 8 போலி பணி நியமன ஆணை ஒன்றையும் கொடுத்தார். அதை சந்தேகித்து நாகஅர்ச்சுனன் அவரை மீண்டும் தொடர்பு கொண்ட போது, ''இது முதல் ஆணை, மற்றொரு பணி நியமன ஆணை வரும்,' என சேத்ரோ கூறினார்.
சேத்ரோ மேலும் ரூ.3 ஆயிரம் வேண்டும் எனவும் தொலைபேசியில் கேட்டார். அதனை வந்து பெற்றுக் கொள்ளுமாறு நாக அர்ச்சுனன் குடும்பத்தினர் அவரிடம் தெரிவித்தனர். நாக அர்ச்சுனன் வீட்டுக்கு வந்த சேத்ரோவை வெளியில் விடாமல் பூட்டி விட்டு சிப்காட் போலீசாரிடம் தெரிவித்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்ரோ பாம்பனில் விபத்து மற்றும் வழக்கு விசாரணைகளில் சிக்கிய டூவீலர்களை வாங்கித் தருவதாக ஏமாற்றிய வழக்கில் கைதானவர்.