/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
டேங்கர் லாரி மூலம் குளத்தில் நீர் நிரப்ப முயற்சி
/
டேங்கர் லாரி மூலம் குளத்தில் நீர் நிரப்ப முயற்சி
ADDED : மே 03, 2024 05:34 AM

திருப்புத்துார்: திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயில் குளத்திற்கு தெப்ப விழாவை முன்னிட்டு டேங்கர் லாரி மூலம் நீர் நிரப்பப்படுகிறது.
திருப்புத்தூர் பூமாயிஅம்மன் கோயிலில் தற்போது வசந்தப்பெருவிழா நடந்து வருகிறது. விழாவில் பத்தாம் திருநாளான மே8 ல் தெப்பத்திருவிழா நடைபெறும். தற்போது குளத்தில் போதிய நீர் இல்லை.
இதனால் தெப்பத்திருவிழா நடத்துவதற்கு வசதியாக தற்போது குளத்தில் உள் ஆதார படிக்கட்டு அளவில் தண்ணீர் நிரப்பும் முயற்சி வசந்தப் பெருவிழா குழுவினரால் துவக்கப்பட்டுள்ளது.
டேங்கர் லாரி மூலம் போர்வெல் நீர் எடுத்து வந்து குளத்தில் விடுகின்றனர். தினசரி 20 டேங்கர் தண்ணீர் குளத்திற்கு பாய்ச்சப்படுகிறது.