நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை அண்ணாமலை நகர் கீழ்பாத்தி நாணம்மாள் சமேத நானேஸ்வரர் கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் பூக்கரகம், அக்னி சட்டி எடுத்து வழிபட்டனர். இந்த ஆண்டு கடந்த 19ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கியது.
விழா நாட்களில் அம்மனுக்கு பல்வேறு அபிேஷக ஆராதனை நடந்தது. நேற்று காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் அக்னிச்சட்டி, பூக்கரகம் எடுத்து ஊர்வலமாக வலம் வந்து கோவிலை அடைந்தனர்.