ADDED : ஜூலை 02, 2026 04:31 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை,ஜூலை 3-
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லுாரியில் ராகிங்கிற்கு எதிராக சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் பொறுப்பு அனிதா கிறிஸ்டி தலைமை வகித்து மாணவர்களுக்கு ராகிங் எதிராக சட்ட விழிப்புணர்வு வழங்கினார். முதல்வர் அந்தோணி டேவிட் நாதன் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர்கள், கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
