ADDED : ஜூன் 18, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
காரைக்குடி, ஜூன் 19 -
காரைக்குடி அழகப்பா மாதிரி பள்ளியில் போக்குவரத்து துறை சார்பில் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், காரைக்குடி மண்டல அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பஸ் மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டது. தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். போக்குவரத்து தொழில்நுட்ப துணை மேலாளர் சண்முகசுந்தரம், கிளை மேலாளர் சரவணன் மற்றும் பயிற்சி ஆசிரியர்கள் பாண்டி முருகேசன் நலச்சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
