ADDED : ஜூலை 31, 2024 05:02 AM

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக மனித கடத்தலுக்கு எதிரான உலக தினத்தை முன்னிட்டு மாணவர்கள் கலந்து கொண்ட சட்ட விழிப்புணர்வு ஊர்வலத்தை முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜெ நடராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மாணவர்கள் மற்றும் சமூக நலத்துறை, குழந்தைகள் கடத்தல் தடுப்புபிரிவு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத்துறை, ஐ.ஆர்.சி.டி.எஸ்., தொண்டு நிறுவனம், நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி முத்துக்குமார், மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி கோகுல்முருகன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பசும்பொன் சண்முகையா, மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி பரமேஸ்வரி, ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி செந்தில்முரளி, நீதிபதிகள் சாண்டில்யன், அனிதா கிறிஸ்டி, செல்வம், ஆப்ரின் பேகம், வழக்கறிஞர் சங்க தலைவர் ஜானகிராமன் கலந்துகொண்டனர்.