/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கல்லுாரியில் விழிப்புணர்வு ஊர்வலம்
/
கல்லுாரியில் விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஆக 15, 2024 05:02 AM

காரைக்குடி : காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லுாரி என்.சி.சி., மாணவர்கள் சுதந்திர தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
மக்களுக்கு நாட்டுப்பற்றை வளர்த்திடும் நோக்கிலும், வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்ற வலியுறுத்தியும், அழகப்பா அரசு கலைக்கல்லுாரி என்.சி.சி., மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. முதல்வர் பெத்தாலட்சுமி தொடங்கி வைத்தார். என்.சி.சி ஒருங்கிணைப்பாளர் சரவணன் மக்களுக்கு தேசியக் கொடி வழங்கினார். இன்ஸ்பெக்டர் பாஸ்கர், எஸ்.ஐ.,க்கள் மாடசாமி, அசோகன், பூமி செல்வம் கலந்து கொண்டனர்.
* இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் போலீசார் நேற்று ஆய்வில் ஈடுபட்டனர். பயணிகளின் உடைமைகளை சோதனை செய்த பிறகு ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, ஆட்டோ ஸ்டாண்ட், ரயில்கள், தண்டவாளங்கள் நடைமேடைகளிலும் போலீசார் ஆய்வு செய்தனர். ரயில்வே இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில், எஸ்.ஐ., சவுதமா, போலீசார் இந்த பணியில் ஈடுபட்டனர்.
மானாமதுரை நகர் பகுதி மற்றும் ரயில்வே மேம்பாலங்கள், ரயில்வே ஸ்டேஷன்களில் ரயில்வே போலீசார் வெடிகுண்டு பரிசோதனை நடத்தினர். மானாமதுரை வழியாக செல்லும் ரயில்களிலும் பயணிகள் கொண்டு வரும் உடைமைகளையும் சோதனை நடத்தினர்.