ADDED : ஜூலை 30, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை, ஜூலை 31-அலவாக்கோட்டை, எஸ்.புதுாரில் பால் மாடு வளர்ப்போருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வேளாண் ஆராய்ச்சி கழகம், கால்நடை மருத்துவ பல்கலை, குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையம், ஆவின் நிர்வாகம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு வேளாண் அறிவியல் நிலைய தலைவர் சரவணன் தலைமை வகித்தார்.
ஆவின் துணை பதிவாளர் மூர்த்தி, சார்பதிவாளர் ராமசந்திரன், உதவி பொது மேலாளர் நாச்சியப்பன் பயிற்சி அளித்தனர். இதில் 168 பால் மாடு வளர்ப்போர் பங்கேற்றனர். எல் நினோவால் பால் மாடுகளுக்கு ஏற்படும் வெப்ப அழுத்த தாக்கம் குறித்தும், பால் கொள்முதல் நடைமுறை, தீவனங்கள் குறித்தும், அரசு நிதி திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். ////
