/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு 700 காளைகள் பங்கேற்பு
/
அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு 700 காளைகள் பங்கேற்பு
ADDED : மே 28, 2024 04:11 AM

சாலைகிராமம், : சாலைகிராமம் அருகே அய்யம்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 700க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில், காளைகள் முட்டியதில் 15 பேர் காயமுற்றனர்.
அய்யம்பட்டி கழுங்கு முனீஸ்வரர் கோயில் களரி விழாவை முன்னிடடு ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. சிவகங்கை கோட்டாட்சியர்விஜயகுமார் தலைமை வகித்தார். தாசில்தார் கோபிநாத் முன்னிலை வகித்தார்.
மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி, ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன், ஊராட்சி தலைவர் தங்கம் பங்கேற்றனர். வீரர்கள் உறுதிமொழி எடுத்தனர். முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் அனைத்து காளைகளும் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விட்டனர்.
காளைகளை வீரர்கள் உற்சாகமாக விரட்டி பிடித்தனர். காளைகளை பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி காசுகள், சைக்கிள், அண்டா, பானை, குத்துவிளக்கு, கட்டில், பீரோ பரிசாக வழங்கினர்.
அய்யம்பட்டி கிராம மக்கள் மற்றும் விழாக்குழுவினர் ஏற்பாட்டை செய்திருந்தனர்.