/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழடியில் பார்வையாளர்களை கவரும் அரசு கட்டடங்கள்
/
கீழடியில் பார்வையாளர்களை கவரும் அரசு கட்டடங்கள்
ADDED : ஆக 05, 2024 07:12 AM

கீழடி : கீழடியில் புதிதாக கட்டப்படும் அரசு கட்டடங்கள் பலவும் பண்டைய கால கட்டட கலையை போல் கட்டப்படுவதால் சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கீழடியில் 2015ல் மத்திய தொல்லியல் துறை சார்பில் நதி கரை நாகரீகத்தை கண்டறியும் பொருட்டு நடந்த அகழாய்வில் 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருட்கள், அணிகலன்கள், வரி வடிவ எழுத்துகள் கண்டறியப்பட்டு கீழடியிலேயே அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஒரு வருடத்தில் சுமார் ஐந்து லட்சம் பேர் வரை அருங்காட்சியகத்தை கண்டு ரசித்து சென்றுள்ளனர். தினசரி அருங்காட்சியகத்தை காண ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
கீழடி அருங்காட்சியகம் காண வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு கட்டடங்கள் பலவும் பண்டைய காலத்தை நினைவுபடுத்தும் வண்ணம் கட்டப்பட்டு வருகிறது. கீழடி விலக்கில் ரூ.5 லட்சம் செலவில் நிழற்குடை, ரூ.18 லட்சம் செலவில் புறக்காவல் நிலையம் அனைத்தும் செட்டிநாடு பாரம்பரிய கட்டட கலைக்கு நிகராக கட்டப்படுகிறது.