/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழடியில் உச்சநீதிமன்ற நீதிபதி ராஜேஷ் பின்டல்
/
கீழடியில் உச்சநீதிமன்ற நீதிபதி ராஜேஷ் பின்டல்
ADDED : ஆக 20, 2024 04:48 AM

கீழடி: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தை உச்சநீதிமன்ற நீதிபதி ராஜேஷ் பின்டல் நேற்று பார்வையிட்டார்.
கீழடியில் 2015 முதல் நதிக்கரை நாகரீகத்தை கண்டறியும் பொருட்டு அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்கள் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என ஆய்வில் தெரியவந்தது. இதனையடுத்து கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை கொண்டு உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் கட்டப்பட்டு கடந்தாண்டு மார்ச் 5ல் முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்பட்டது. இதுவரை ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் அருங்காட்சியகத்தை கண்டு ரசித்துள்ளனர்.
இரண்டு ஏக்கர் பரப்பளவில் பத்து கட்டடங்களுடன் அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது. நேற்று உச்சநீதிமன்ற நீதிபதி ராஜேஷ் பின்டல் அருங்காட்சியகத்துக்கு வந்தார். திருப்புவனம் நீதிமன்ற நீதிபதி சந்தானகுமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அருங்காட்சியகத்தை காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் குறித்து தொல்லியல் துறையினர் உச்சநீதிமன்ற நீதிபதியிடம் விளக்கமளித்தனர். ஒரு மணி நேரம் அங்கிருந்த அவர் பின் மதுரை சென்றார்.