/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிறந்த தொழில்முனைவோர் விருது கலெக்டர் ஆஷா அஜித் தகவல்
/
சிறந்த தொழில்முனைவோர் விருது கலெக்டர் ஆஷா அஜித் தகவல்
சிறந்த தொழில்முனைவோர் விருது கலெக்டர் ஆஷா அஜித் தகவல்
சிறந்த தொழில்முனைவோர் விருது கலெக்டர் ஆஷா அஜித் தகவல்
ADDED : மே 09, 2024 05:29 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் சிறந்த தொழில் முனைவோர்களுக்கு கடந்த ஆண்டிற்கான மாநில, மாவட்ட அளவில் விருது வழங்கப்பட உள்ளதாக கலெக்டர்ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
தமிழக அரசு தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்த, குறு, சிறு மற்றும்நடுத்தர தொழில்துறை விருதுகளை வழங்குகிறது. இந்த விருது மாநில, மாவட்ட அளவில் வழங்கப்படும்.
மாநில அளவில் சிறந்த வேளாண் தொழில் முனைவோர், சிறந்த மகளிர் தொழில் முனைவோர், நலிந்த, ஒடுக்கப்பட்ட தொழில் முனைவோர் விருது, சிறந்த தரம் ஏற்றுமதி, சிறந்த தொழில் முனைவோர் விருதுகள் வழங்கப்பட உள்ளது.
மாவட்ட அளவில் சிறந்த தொழில் முனைவோர் விருது என 6 பிரிவுகளில் விருது வழங்கப்பட உள்ளது. விருது பெற விரும்புவோர் awards.fametn.com இணையதளத்தில் மே 20க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரத்திற்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என்றார்.