/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் பா.ஜ., பிரசாரம்
/
திருப்புத்துாரில் பா.ஜ., பிரசாரம்
ADDED : ஏப் 18, 2024 06:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: சிவகங்கை தொகுதி பா.ஜ., கூட்டணி வேட்பாளர் தேவநாதன் நேற்று காலை பூலாங்குறிச்சி, நெற்குப்பை, கீழச்சிவல்பட்டி, பட்டமங்கலம், கண்டரமாணிக்கம் பகுதியில் பிரசாரம் செய்தார்.
திருப்புத்துாரில் பேசுகையில், சிவகங்கையில் 7 முறை சிதம்பரம், ஒரு முறை கார்த்தி எம்.பி.யாக இருந்து தொகுதிக்கு பலனில்லை. கட்சியினர் அதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். திருப்புத்துார் பகுதியில் புதிய ரயில்பாதை அமைப்பது குறித்து பிரதமரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
அனுமதியில்லாமல் பிரசாரம் நடந்ததால் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

