/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பா.ஜ., ஆட்சி மாறினால் புதிய சிந்தனை உருவாகும்: சிதம்பரம்
/
பா.ஜ., ஆட்சி மாறினால் புதிய சிந்தனை உருவாகும்: சிதம்பரம்
பா.ஜ., ஆட்சி மாறினால் புதிய சிந்தனை உருவாகும்: சிதம்பரம்
பா.ஜ., ஆட்சி மாறினால் புதிய சிந்தனை உருவாகும்: சிதம்பரம்
ADDED : ஏப் 18, 2024 06:19 AM
மானாமதுரை: மானாமதுரை, இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளில் சிவகங்கை காங்., வேட்பாளர் கார்த்தியை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பிரசாரம் செய்தார்.
அவர் பேசியதாவது: இந்தியாவில் 10 ஆண்டு ஆட்சி செய்த பா.ஜ., அரசை மாற்றினால் தான் புதிய சிந்தனை, புதிய தலைமுறை, புதிய இளைஞர்கள், புதிய திறமை, புதிய திட்டங்கள் வரும்.
பா.ஜ., அரசின் பயன் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் தான். பிரதமர் மோடி தொடர்ந்து இருந்தால் இன்னும் விலைவாசி உயரும். தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பொதுவான சட்டத்தை எப்படி உருவாக்க முடியும் என்றார்.