/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் பத்திர தட்டுப்பாடு
/
மானாமதுரையில் பத்திர தட்டுப்பாடு
ADDED : ஜூன் 07, 2024 05:14 AM
மானாமதுரை: மானா மதுரையில் கடந்த இரண்டு மாதங்களாக ரூ.10,20,50 பத்திரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடன் வாங்குதல்,மின் வாரியத்தில் பெயர் மாற்றுதல்,காஸ் இணைப்பு பெறுதல், பெயர் மாற்றுதல் மற்றும் பல்வேறு வித பணிகளுக்கு அதன் தொகைகளுக்கேற்ப ரூ.10,20,50 பத்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 2 மாதங்களாக மானாமதுரை பகுதியில் முத்திரைத்தாள் விற்பனை செய்பவர்களிடம் இந்த பத்திரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கூடுதலாக பணம் செலவழித்து ரூ.100 பத்திரத்தை பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் மானாமதுரையில் தட்டுப்பாடு இல்லாமல் பத்திரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்திரைத்தாள் விற்பனை செய்பவர்கள் கூறியதாவது: ரூ.10,20,50 பத்திரங்கள் வாங்குவதற்காக ஆன்லைனில் பதிவு செய்ய சென்றால் அதில் இருப்பு இல்லை என வருகிறது. அதனால் ரூ.100 பத்திரங்களை பொதுமக்களிடம் விற்பனை செய்து வருகிறோம் என்றனர்.
மானாமதுரை சார்நிலை கருவூல அதிகாரிகள் கூறியதாவது: ரூ.10,20,50 பத்திரங்கள் குறைந்த அளவே வருவதால் இருக்கின்ற பத்திரங்களை அனைத்து முத்திரைத்தாள் விற்பனை செய்பவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்தவர்களுக்கு வழங்கி வருகிறோம். விரைவில் தட்டுப்பாடு நீங்கிவிடும் என்றனர்.