/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிறுவன் மூளைச்சாவு உறுப்புகள் தானம்
/
சிறுவன் மூளைச்சாவு உறுப்புகள் தானம்
ADDED : மே 29, 2024 08:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்த கதிரேசன் மகன் நிதிஷ், 16. இவர், டூ - வீலர் மோதியதில் கீழே விழுந்தார். தலையில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனை அவசர விபத்து சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு மூளைச்சாவு நிலையை அடைந்தார்.
சிறுவனின் தந்தை கதிரேசன் ஒப்புதல்படி, நிதிஷின் உடல் உறுப்புகள் சென்னை எம்.ஜி.எம்., மதுரை மீனாட்சி மிஷன், கிரேஸ் கென்னட், மதுரை அரசு மருத்துவமனைகளுக்கும், சென்னை அப்போலோ மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டன. சிறுவனின் உடல் அரசு மரியாதையுடன் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.