ADDED : ஆக 03, 2026 03:30 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை,ஆக.4-–
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா நடந்தது.
முதல்வர் செல்வராஜன் தலைமை வகித்தார். கண்காணிப்பாளர் தமிழ்வாணன், துணை முதல்வர் விசாலாட்சி, குழந்தைகள் நல துறை தலைவர் குணா முன்னிலை வகித்தார். தாய்பால் ஊக்குவிப்பு உறுதிமொழி எடுத்தனர். தாய்பாலின் அவசியம் குறித்து விழிப்புணர்வு அளித்தனர். நிலைய மருத்துவர் முகமது ரபி, உதவி நிலைய மருத்துவர்கள் தென்றல், வெங்கடேஷ், டாக்டர்கள் ராஜா, நாகசுதா, தென்னரசி பங்கேற்றனர். டாக்டர் பேபி பிரவீணா நன்றி கூறினார்.
///
