ADDED : மே 04, 2024 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் ஆற்றுப்பாலங்களை 'குடி'மகன்கள் திறந்தவெளி 'பார்' ஆக பயன்படுத்துவதால் அவ்வழியாகச் செல்லும் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இவ்வொன்றியத்தில் அணைக்கரைப்பட்டி, சிவபுரிபட்டி, முறையூர் பகுதியில் உள்ள பாலாறு பாலங்களையும், விழுப்புணிக்களம் உப்பாறு பாலத்தையும் 'குடி'மகன்கள் சமீப காலமாக திறந்தவெளி 'பார்'களாக பயன்படுத்துகின்றனர். மாலை 6:00 மணிக்கு மேல் பாலத்தின் இருபுறமும் அமர்ந்து கொண்டு அவ்வழியாகச் செல்லும் பொது மக்களுக்கு இடையூறாக மது அருந்திவிட்டு தகராறு செய்கின்றனர். பெண்கள் டூவீலர்களில் அவ்வழியாகச் செல்ல அச்சப்படும் நிலை உள்ளது. இரவு நேரங்களில் பாலம் உள்ள பகுதி பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.