/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காளையார்கோவிலில் மாட்டு வண்டி போட்டி
/
காளையார்கோவிலில் மாட்டு வண்டி போட்டி
ADDED : மே 24, 2024 02:41 AM

சிவகங்கை: காளையார்கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு நடந்த மாட்டுவண்டி பந்தயத்தில் 19 ஜோடி மாடுகள் பங்கேற்றன.
காளையார் கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக போட்டி நடந்தது. பெரிய மாடு பிரிவில் 5 மாட்டு வண்டிகளும், சிறிய மாட்டு பிரிவில் 14 வண்டிகள் என 19 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. தொண்டி மதுரை சாலையில் நடந்த போட்டியில் பெரிய மாட்டுப் பிரிவிற்கு 8 கி.மீ., துாரமும், சிறிய மாடுகளுக்கு 6 கி.மீ., துாரமும் விழா குழுவினரால் நிர்ணயம் செய்யப்பட்டது.
போட்டியில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகள் பங்கேற்றன. போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடித்து வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும், கேடயமும், ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.