ADDED : ஜூன் 16, 2024 10:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை அருகே வேலாயுதபட்டிணம் தர்ம முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 44 ஜோடி மாடுகள் பங்கேற்றன. பெரிய மாட்டு பிரிவில் 10 ஜோடி, சிறிய மாட்டு போட்டியில் 34 ஜோடிகள் பங்கேற்றன. பெரிய மாட்டிற்கு 8 மைல், சிறிய மாட்டிற்கு 6 மைல் எல்லை நிர்ணயம் செய்திருந்தனர். முதல் நான்கு இடத்தை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளருக்கு பரிசு வழங்கினர்.