/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை வாரச்சந்தையில் கிலோ ரூ.280க்கு பாகற்காய் விற்பனை
/
மானாமதுரை வாரச்சந்தையில் கிலோ ரூ.280க்கு பாகற்காய் விற்பனை
மானாமதுரை வாரச்சந்தையில் கிலோ ரூ.280க்கு பாகற்காய் விற்பனை
மானாமதுரை வாரச்சந்தையில் கிலோ ரூ.280க்கு பாகற்காய் விற்பனை
ADDED : மே 03, 2024 05:45 AM

மானாமதுரை: மானாமதுரை வாரச்சந்தையில் சின்ன பாகற்காய் விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.280க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
மானாமதுரையில் வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறும் வாரச்சந்தைக்கு மதுரை, சிவகங்கை, இளையான்குடி, திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
இவற்றை வாங்க மானாமதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
இந்த வாரம் விற்பனைக்கு வந்த காய்கறிகளில் சின்ன பாகற்காய் விலை ஒரு கிலோ ரூ.240 லிருந்து ரூ.280 வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோன்று ஒரு எலுமிச்சம்பழம் ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்டது.
மற்ற காய்கறிகளான கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, வெண்டைக்காய், தக்காளி, அவரை, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் உயர்ந்து காணப்பட்டது.
காய்கறி வியாபாரிகள் சிலர் கூறுகையில், கடந்த 2 வாரங்களாக கடுமையான வெயில் அடித்து வருவதனால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது.
இன்னும் வரும் வாரங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் மேலும் விலை உயர உள்ளதாக கூறினர்.