/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கொலை மிரட்டல்; 4 பேர் மீது வழக்கு
/
கொலை மிரட்டல்; 4 பேர் மீது வழக்கு
ADDED : மே 13, 2024 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி நவரத்தின நகர் சங்கர். இவரது மனைவி துர்கா 33. இவர், திருமணத்தின் போது 60 பவுன்நகை, ரூ.3 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை சாமான்கள், ரூ.1 லட்சம் சீதனமாக கொண்டு வந்தார்.
இந்நிலையில் சங்கர், வேறொரு பெண்ணை 2 வது திருமணம் செய்து, அப்பெண்ணை துர்காவின் வீட்டிற்கே அழைத்து வந்தார். மேலும் இதை கேட்ட துர்காவிற்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இது குறித்து துர்கா காரைக்குடி மகளிர் போலீசில் புகார் அளித்தார். சங்கர், உஷா உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.