/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டை நகராட்சி தலைவருக்கு எதிராக வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
/
தேவகோட்டை நகராட்சி தலைவருக்கு எதிராக வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
தேவகோட்டை நகராட்சி தலைவருக்கு எதிராக வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
தேவகோட்டை நகராட்சி தலைவருக்கு எதிராக வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ADDED : ஜூன் 04, 2024 05:33 AM
மதுரை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் முறைகேடு நடந்துள்ளதாகவும், தலைவரை தகுதி நீக்கம் செய்யக்கோரியும் தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தேவகோட்டை இளங்கோவன் தாக்கல் செய்த பொதுநல மனு:தேவகோட்டை நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம். இவரது குடும்ப உறுப்பினர்கள் நகராட்சிக்கு வரி செலுத்தவில்லை.
அவர் துணைத் தலைவராக இருந்தபோது குடும்பத்தினருக்கு கடைகள் ஒதுக்கப்பட்டன. குறைந்த தொகைக்கு ஒப்பந்தப் பணி கோரப்பட்டது.தலைவராக பொறுப்பேற்ற பின் சகோதரருக்கு ஒப்பந்தப் பணி வழங்கப்பட்டது. தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
குடும்ப உறுப்பினர்கள் ஏலம் மூலம் எடுத்த கடைகளுக்கு வாடகை செலுத்தவில்லை. நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. முறைகேடு நடந்துள்ளதால் தலைவரை பதவி நீக்கம் செய்ய கலெக்டர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலர், கலெக்டர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பி 2 வாரங்கள் ஒத்திவைத்தது.