/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி கொப்புடைய நாயகி கோவில் அலுவலர் மீது வழக்கு
/
காரைக்குடி கொப்புடைய நாயகி கோவில் அலுவலர் மீது வழக்கு
காரைக்குடி கொப்புடைய நாயகி கோவில் அலுவலர் மீது வழக்கு
காரைக்குடி கொப்புடைய நாயகி கோவில் அலுவலர் மீது வழக்கு
ADDED : ஜூன் 06, 2024 07:08 PM
காரைக்குடி:காரைக்குடி அருகேயுள்ள வேலங்குடியைச் சேர்ந்த பாண்டித்துரை என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில், 'கொப்புடைய நாயகியம்மன் கோவிலில் 2015ல் ஆபரணங்களை சரி பார்த்தபோது, 189 கிராம் தங்கம், 10 வைரக்கற்கள் போன்றவற்றை காணவில்லை. தொடர்ந்து பல செயல் அலுவலர்கள் பணியாற்றியும் நகையை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே கோவில் நகைகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, 'கொப்புடைய நாயகியம்மன் கோவிலின் செயல் அலுவலர் மீது எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்து, அதன் அடிப்படையில் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.
அதையடுத்து, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர். கோவில் செயல் அலுவலர் மகேந்திர பூபதி புகாரில் அப்போதைய கூடுதல் பொறுப்பு செயல் அலுவலர் அர்ஜுனன் மீது காரைக்குடி போலீசார் நகை மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணை நடக்கிறது.