சிவகங்கை : சிவகங்கை அருகே இலந்தங்குடிப்பட்டி முத்தன் மகன் சுப்பிரமணியன் 65. இவர் சிவகங்கை வேளாண்மைத்துறை செயற் பொறியாளர்அலுவலகத்தில் டிரைவராக பணி செய்து ஓய்வு பெற்றவர்.
இவர் பணியில் இருந்தபோது மதுரை திருநகர் சொக்கநாதர் தெரு கோமதி நாயகம் மகன் பரமகார்த்தி கண்காணிப்பு பொறியாளருக்கு டிரைவராக பணி புரிந்தார். பரமகார்த்தி தற்போது விருதுநகர் வேளாண்மை துறையில் டிரைவராக பணிபுரிகிறார்.
சுப்பிரமணியன் கடந்த 2017ம் ஆண்டு ஆக.7ம் தேதி தனக்கு தெரிந்த நபருக்கு வேலை வாங்கி தரும்படி ரூ.2 லட்சத்தை பரமகார்த்தியிடம் கொடுத்தார். பணத்தை வாங்கியபரமகார்த்தி வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றியதாக
சுப்பிரமணியன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடவடிக்கை எடுக்காததால் சிவகங்கை ஜே.எம்.1 நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். சுப்பிரமணியன் மனுவிற்கு உரிய விசாரணை நடத்த நீதிபதி போலீசாருக்கு உத்தரவிட்டார். சிவகங்கை நகர் போலீசார் பரமகார்த்தி மீது நம்பிக்கை மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்தனர்.