ADDED : மே 31, 2024 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் (காவிரி), திருச்சி முத்தரசநல்லூர், தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் கொண்டு செல்லும் பிரதான குழாய்களில் உள்ள கசிவு சரி செய்யபட உள்ளதால், சிவகங்கை மாவட்டத்தில் இன்றும், நாளையும் குடிநீர் விநியோகம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.