/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தொழில் முனைவோர் பயிற்சி பெற்றோருக்கு சான்று வழங்கல்
/
தொழில் முனைவோர் பயிற்சி பெற்றோருக்கு சான்று வழங்கல்
தொழில் முனைவோர் பயிற்சி பெற்றோருக்கு சான்று வழங்கல்
தொழில் முனைவோர் பயிற்சி பெற்றோருக்கு சான்று வழங்கல்
ADDED : மார் 03, 2025 06:42 AM
சிவகங்கை : திருப்புத்துார், திருப்புவனத்தில் நடந்த தொழில் முனைவோர் பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு கலெக்டர் ஆஷா அஜித் சான்றிதழ் வழங்கினார்.
மாநில திட்டக்குழு வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் திருப்புவனம், திருப்புத்துார் ஒன்றியத்தில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி, இணைய வழி சந்தைபடுத்துதல், மின்னணு வர்த்தக பயிற்சி வழங்கப்பட்டது. இதில் 126 பெண்கள் உட்பட 134 தொழில் முனைவோர் பங்கேற்றனர். பயிற்சி பெற்றவர்களுக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில் கலெக்டர் சான்றினை வழங்கினார்.
தேவகோட்டை சப் கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், மாவட்ட ஊராட்சி செயலர் கலைச்செல்வராஜன் பங்கேற்றனர். புள்ளியியல் அலுவலர் சரவணக்குமார், நிதி ஆயோக், திட்டக்குழு சிறப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துவிக்னேஸ்வரன், மாவட்ட ஊராட்சி அலுவலக உதவியாளர்கள் காசிவிஸ்வநாதன், ராஜீவ் காந்தி, அழகப்பா பல்கலை மகளிரியல் துறை மாணவர்கள் பங்கேற்றனர். தொழில் முனைவோர் மேம்பாடு, புத்தாக்க நிறுவன திட்ட மேலாளர் அருமைரூபன் ஜோசப் நன்றி கூறினார்.