/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கல்வி அலுவலகத்தில் 3 ஆண்டுக்கு மேல் பணிபுரிவோர் கூண்டோடு மாற்றம்
/
கல்வி அலுவலகத்தில் 3 ஆண்டுக்கு மேல் பணிபுரிவோர் கூண்டோடு மாற்றம்
கல்வி அலுவலகத்தில் 3 ஆண்டுக்கு மேல் பணிபுரிவோர் கூண்டோடு மாற்றம்
கல்வி அலுவலகத்தில் 3 ஆண்டுக்கு மேல் பணிபுரிவோர் கூண்டோடு மாற்றம்
ADDED : ஜூலை 12, 2024 08:36 PM
சிவகங்கை:தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக முதன்மை கல்வி, மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர் அலுவலகங்கள் செயல்படுகின்றன.
இந்த அலுவலகங்கள், அரசு பள்ளிகளில் அமைச்சு பணியாளர் என்ற முறையில் மாவட்ட கல்வி அலுவலரின் பி.ஏ., முதல் கண்காணிப்பாளர், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், ஸ்டெனோ, டைப்பிஸ்ட்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் 3 ஆண்டிற்கு மேல் பணிபுரிந்த இடத்தில் இருந்து பணியிட மாறுதல் செய்யப்பட வேண்டும் என கல்வித்துறை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ‛எமிஸ்' தளத்தில் பணியிட மாறுதலுக்கான விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். ‛கூகுள் மீட்' வாயிலாக பணியிட மாறுதல் கவுன்சிலிங் விதிமுறைப்படி, பணியிட மாறுதல் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கூகுள் மீட் கவுன்சிலிங் ஜூலை 16 முதல் 19 வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.