
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லுாரி வேதியியல் துறை சார்பில் வேதியியல் மன்ற நிறைவு விழா மற்றும் வேதியியல் விழா நடைபெற்றது.
துறைத்தலைவர் சுல்த்தான் செய்யது இப்ராஹிம் வரவேற்றார்.முதல்வர் ஜபருல்லாகான் தலைமை தாங்கினார். சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர், சபினுல்லாகான், கல்வியியல் கல்லுாரி முதல்வர் முஹம்மது முஸ்தபா, இயற்பியல்துறை தலைவர் முஸ்தாக் அஹமது கான் பேசினர். பெங்களூரு ஐபிஎம் பொறியாளர் ராகவன் தேவநாதன் சிறப்புரையாற்றினார்.
பல்கலை., அளவில் முதல் ரேங்க் பெற்ற 2 மாணவிகளுக்கு பரிசும், 3,5,9ம் ரேங்க் பெற்ற மாணவிகளுக்கும், பல்கலை தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை இணைப்பேராசிரியர் செய்யது அபுதாஹிர் உதவிப் பேராசிரியர் ரேவதி செய்திருந்தனர்.
உதவிப் பேராசிரியர் ஜெயமுருகன் நன்றி கூறினார்.

