ADDED : ஜூலை 20, 2026 05:01 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை,ஜூலை 21-
தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சர்வதேச செஸ் தினம் கொண்டாடப்பட்டது.
தலைமையாசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் ஜோனி சுபால்டன் முன்னிலை வகித்தார். மாணவி நந்தனா வரவேற்றார். பயிற்றுநர் காவியா மாணவர்களுக்கு செஸ் தொடர்பான பல்வேறு தகவல்களை விளக்கினார்.
