ADDED : ஆக 05, 2024 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிங்கம்புணரி, திருப்புவனத்தில் நாளை மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, சிங்கம்புணரி ஒன்றியத்திற்கு உட்பட்ட அணைக்கரைபட்டி, கிருங்காக்கோட்டை, ஒடுவன்பட்டி, மேலப்பட்டி, மதுராபுரி, பிரான்மலை, சிவபுரிபட்டி, ஏ.காளாப்பூர் ஆகிய கிராமங்களுக்கு பிரான்மலையில் உள்ள நகரத்தார் மண்டபத்திலும், திருப்புவனம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அல்லிநகரம், கலியாந்துார், நயிரான்பேட்டை, மேலராங்கியம், மகுடி அம்பலத்தாடி, புளியங்குளம், தவத்தாரேந்தல், பழையனுார், வீரரேந்தல், அச்சங்குளம், ஓடத்துார், மேல, கீழ சொரிக்குளம், டி.ஆலங்குளம், எஸ்.வாகைக்குளம் ஆகிய கிராமங்களுக்கு அல்லிநகரம் மணிராஜம்மாள் திருமண மண்டபத்தில் காலை 10:00 முதல் மாலை 3:00 மணி வரை நடைபெறும்.