/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு
/
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு
ADDED : ஜூன் 13, 2024 06:03 AM
சிவகங்கை: சிவகங்கையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பை வலியுறுத்தி நடந்த கையெழுத்து இயக்கத்தையும், விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கும் முகாமை கலெக்டர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார். நகராட்சி தலைவர் துரைஆனந்த் முன்னிலை வகித்தார். தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சதீஷ்குமார் வரவேற்றார். சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி பரமேஸ்வரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராமசந்திரன், ஐ.ஆர்.சி.டி.எஸ்., நிறுவனர் ஜீவானந்தம், தொழிலாளர் நலத்துறை துணை ஆய்வாளர் வேலாயுதம், உதவி ஆய்வாளர்கள் மகாலட்சுமி, பாண்டிசெல்வி, முத்திரை ஆய்வாளர் மாரியப்பன், மனோகர் பங்கேற்றனர். தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் ஏற்பாட்டை செய்திருந்தனர்.