/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் செயின் பறிப்பில் சிறுவர்கள்; 'சிசிடிவி' காட்சியால் மக்கள் அதிர்ச்சி
/
திருப்புவனத்தில் செயின் பறிப்பில் சிறுவர்கள்; 'சிசிடிவி' காட்சியால் மக்கள் அதிர்ச்சி
திருப்புவனத்தில் செயின் பறிப்பில் சிறுவர்கள்; 'சிசிடிவி' காட்சியால் மக்கள் அதிர்ச்சி
திருப்புவனத்தில் செயின் பறிப்பில் சிறுவர்கள்; 'சிசிடிவி' காட்சியால் மக்கள் அதிர்ச்சி
ADDED : மே 13, 2024 12:14 AM

திருப்புவனம் : திருப்புவனம் வட்டாரத்தில் அலைபேசி, செயின் பறிப்பில் சிறுவர்கள் அதிகளவில் ஈடுபட்டு வருவதாக, 'சிசிடிவி' காட்சி மூலம் தெரியவந்ததால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்புவனம் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக டூவீலர், சைக்கிள் திருட்டுகள் அதிகரித்து வருகின்றன. அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்பவர்களிடம் கத்தியை காட்டி அலைபேசி, செயின் பறிப்பில் ஒரு கும்பல் ஈடுபட்டு வருகிறது.
பெரும்பாலும் சிறுவர்களே செயின் பறிப்பில் ஈடுபட்டு வருவது தான், போலீசாருக்கே அதிர்ச்சியை தந்துள்ளது. திருப்புவனம் ரயில் நிலையம் அருகே பலரும் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். சில நாட்களுக்கு முன் ஊராட்சி செயலர் நடைபயிற்சி மேற்கொண்ட போது சில சிறுவர்களும் உடன் நடந்து வந்துள்ளனர்.
அதில் ஒரு சிறுவன் திடீரென அவர் கையில் இருந்த அலைபேசியை பறித்து கொண்டு தப்பினார். விரட்டி சென்றும் பிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து திருப்புவனம் போலீசில் புகார் தெரிவித்தார். சிறுவர்களை விரட்டி சென்ற பாதையில் இருந்த சி.சி.டி.வி.,கேமரா பதிவுகளை சேகரித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். அதற்கு பின்னரும் திருட்டு கும்பலை போலீசாரால் பிடிக்க முடியவில்லை. திருட்டு கும்பல் சிறுவர்களை அலைபேசி, செயின் பறிப்பில் ஈடுபட பயிற்சி கொடுத்து வருகின்றனர். போலீசாரும் சிறுவர்கள் என்பதால் சிறையில் அடைப்பது இல்லை. பொருட்களை பறி கொடுத்தவர்களுக்கு திரும்ப ஒப்படைத்து விடுவதால் அவர்களும் கண்டு கொள்வதில்லை.
திருப்புவனத்தில் தொடர்ச்சியாக வழிப்பறி சம்பவம் நடந்து வருவதால் பலரும் தனியாக நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். செயின் , அலைபேசிகளை பறித்து செல்வதுடன் கத்தியை காட்டி மிரட்டியும் சிறுவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டு வருவது தான் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.