ADDED : மே 13, 2024 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : மதகுபட்டி அருகே வடக்கு காடேனரியில் கருமுகிலுடைய அய்யனார், சோனை கருப்பணசாமி கோயில் சித்திரை திருவிழா பால்குடம் நடந்தது.
மே 4 ல் இங்கு காப்பு கட்டுடன் விழா துவங்கியது. மே 11ல் பக்தர்கள் சந்தன, பால்குடம் எடுத்து நேர்த்தி செலுத்தினர். நேற்று சுவாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட அபிேஷகம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். கிராம மக்கள் விழா ஏற்பாட்டை செய்திருந்தனர்.