/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் புதுப்பொலிவு: நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்படுமா
/
மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் புதுப்பொலிவு: நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்படுமா
மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் புதுப்பொலிவு: நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்படுமா
மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் புதுப்பொலிவு: நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்படுமா
UPDATED : ஜூன் 03, 2024 05:09 AM
ADDED : ஜூன் 03, 2024 03:17 AM

மானாமதுரை: பாரம்பரியமிக்க மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டுமென்றும், ஸ்டேஷன் வளாகத்தை புதுப்பிக்க வேண்டுமென பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில் முக்கிய ஜங்ஷனாக மானாமதுரை கடந்த 1902ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டது. இங்கிருந்து விருதுநகர், மதுரை, ராமேஸ்வரம், திருச்சி ஆகிய இடங்களுக்கு ரயில்வே வழித்தடம் அமைக்கப்பட்டு ரயில்கள் சென்று வருகின்றன. மீட்டர் கேஜ் பாதையாக இருந்த போது மானாமதுரை வழியாக ராமேஸ்வரத்திலிருந்து கோயம்புத்துாருக்கும், பாலக்காட்டில் இருந்து ராமேஸ்வரத்திற்கும், மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கும், கொல்லத்தில் இருந்து நாகூருக்கும் இடையே ஓடிய ரயில்கள், அகல ரயில் பாதை மாற்றிய பின் ரத்து செய்யப்பட்டது.
மானாமதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட சிலம்பு ரயில் தற்போது செங்கோட்டையிலிருந்து இயக்கப்படுவதால் மானாமதுரை சுற்றுவட்டார பயணிகளுக்கு போதிய இருக்கை கிடைப்பதில்லை. இதே போல் மானாமதுரையிலிருந்து மன்னார்குடிக்கு பகலில் இயக்கப்பட்ட ரயில் தற்போது காரைக்குடியோடு நிறுத்தப்பட்டதால் மானாமதுரை சுற்றுவட்டார பயணிகள் அவதிக்கு உள்ளாகின்றனர். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த ரயில்வே ஸ்டேஷனில் உள்ள பெரும்பாலான கட்டடங்கள் தகர சீட் கொண்ட மேற்கூரையாக உள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான ரயில்வே ஸ்டேஷன்கள் ‛அம்ரூத் பாரத்' திட்டத்தில் புனரமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் மட்டுமே ஆங்கிலேயர் காலத்தில் கட்டியது போன்றே காட்சி அளிக்கிறது. மானாமதுரை ரயில்வே ஜங்ஷனையும் அம்ரூத் திட்டத்தில் சேர்த்து, புதியகட்டுமான பணிகளை செய்து ஸ்டேஷன் வளாகத்தையும் சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த வழியே ஓடி நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
///
ஆண்டு வருவாய் ரூ.7.53 கோடி:
பாக்ஸ் மேட்டர்:
* 2023 - 24 ம் ஆண்டு ரயில்வே வணிக பிரிவு கணக்குபடி, பயணிகள் வருகை, பார்சல் சர்வீஸ் மூலம் ரூ.7 கோடியே 53 லட்சத்து 87 ஆயிரத்து 846 வருவாயினை மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் பெற்றுள்ளது. இங்கிருந்து 8 லட்சத்து 57 ஆயிரத்து 989 பயணிகள் ரயிலில் பயணித்துள்ளனர். இந்த ஸ்டேஷனுக்கு தினமும் 2,344 பயணிகள் வருகை மூலம் ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்து 978 வருவாய் கிடைத்து வருகிறது.
//