/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு பள்ளிகளில் துாய்மைப் பணி துவங்கியது
/
அரசு பள்ளிகளில் துாய்மைப் பணி துவங்கியது
ADDED : ஜூன் 05, 2024 01:08 AM

மானாமதுரை : மானாமதுரை, இளையான்குடி அரசு பள்ளிகளில் தினமலர் செய்தி எதிரொலியாக சுத்தம் செய்யும் பணி நேற்று துவங்கியது.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் வரும் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு பள்ளி வளாகங்கள் சுத்தம் செய்யப்படாமல் குப்பை தேங்கி காணப்பட்டது.
அரசு பள்ளிகளை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டிருந்தனர்.
அரசு பள்ளிகளை நுாறு நாள் பணியாளர்கள் சுத்தம் செய்வது வழக்கம். இந்த வருடம் அரசு பள்ளிகளை நூறு நாள் பணியாளர்கள் சுத்தம் செய்ய வர மாட்டார்கள் என ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்ததை தொடர்ந்து தலைமை ஆசிரியர்கள் புலம்பினர். இது குறித்து நேற்று முன்தினம் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதனைத் தொடர்ந்து நேற்று மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் நூறு நாள் பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர்.