/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாணவர்களுக்குவழிகாட்டுதல் பயிற்சி
/
மாணவர்களுக்குவழிகாட்டுதல் பயிற்சி
ADDED : ஜூலை 05, 2024 05:00 AM
சிவகங்கை: சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி முகாம் நடந்தது.முதல்வர் துரையரசன் தலைமை வகித்தார்.
பேராசிரியர் வரலாற்றுத் துறை தலைவர் கலைச்செல்வி வரவேற்றார். பேராசிரியர் விலங்கியல் துறை தலைவர் அழகுச்சாமி பேசினார். சிவகங்கை தமிழ் சங்க நிறுவனர் ஜவகர் விடாமுயற்சியும் வெற்றியும் தலைப்பில் பேசி முகாமைத் தொடங்கி வைத்தார். சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன், வாகன போக்குவரத்து ஆய்வாளர் மாணிக்கம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி பேசினர். கல்லுாரி வணிக நிர்வாகவியல் துறைதலைவர் கேத்தராஜ், தாவரவியல் துறை தலைவர் மாரியப்பன் கருத்துரை வழங்கினர். ஒருங்கிணைப்பாளராக ராமமூர்த்தி, சிவா, மைக்கேல், சதிஷ்கண்ணா, பொன்மலர், வாஞ்சிநாதன் செயல்பட்டனர். சிவா நன்றி கூறினார்.