/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கல்லுாரி பேராசிரியர் - பெற்றோர் சந்திப்பு
/
கல்லுாரி பேராசிரியர் - பெற்றோர் சந்திப்பு
ADDED : ஆக 01, 2024 04:36 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் ஆ.பி.சீ.அ. கல்லுாரியில் மாணவர்கள் சேர்க்கை நிகழ்ச்சி,பெற்றோர்- பேராசிரியர் சந்திப்பு நடந்தது.
செயலர் நா.ஆறுமுகராஜன் தலைமை வகித்தார். முதல்வர் கேப்டன் ஜெயக்குமார், துணை முதல்வர் நா.அழகப்பன் முன்னிலை வகித்தனர். முதலாம் ஆண்டு மாணவர்கள் பெற்றோர்களுடன் பங்கேற்றனர். கல்லூரியில் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்தும், மாணவர்கள் மீது பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விளக்கப்பட்டது.
போதைப் பொருட்கள் பாதிப்பு, அரசு மாணவர்களுக்கு வழங்கும் உதவித்தொகை குறித்தும் விளக்கப்பட்டது. ஏற்பாட்டினை மாணவர் சேர்க்கை விழா குழு பேராசிரியர்கள் பா.சுப்பையா செந்தில்குமார், எஸ்.நாராயணசாமி, பி.அருண்ராஜ், மொ.சிவச்சந்திரன், பி.மாரிச்சாமி செய்தனர்.