ADDED : மே 09, 2026 05:01 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை,மே 10-
சிவகங்கையை சேர்ந்தவர் 17 வயது சிறுமி.
இவர் காரைக்குடியில் உள்ள கல்லுாரியில் இளங்கலை அறிவியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது அப்பா எலக்ட்ரிக்கல் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் 12:30 மணிக்கு சிறுமி வீட்டில் டி.வி., பார்த்துள்ளார். அதற்கு சிறுமியின் தாயார் சத்தம் போட்டுள்ளார். மதியம் 2:45 மணிக்கு வீட்டில் யாரும் இல்லாத போது சிறுமி வீட்டில் அறையை பூட்டிக்கொண்டு மின்விசிறியில் சேலையால் துாக்கு மாட்டி இறந்தார். வீட்டிற்கு வந்த அவரது தாயார் அறையை திறக்க முயற்சித்த போது உள்பக்கமாக பூட்டியிருந்தது. கதவை உடைத்து பார்த்த போது சிறுமி இறந்த நிலையில் இருந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
