ADDED : ஆக 15, 2024 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி : கீழநெட்டூரில் ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் ரூ.56.54 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தை காணொளி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
எம்.எல்.ஏ.,தமிழரசி சமுதாயக் கூடத்தில் குத்துவிளக்கேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., மதியரசன்,கீழநெட்டூர் ஊராட்சி தலைவர் ராமாயி, தாசில்தார் முருகன், பேச்சாளர் அய்யாச்சாமி,கண்ணமங்கலம் கூட்டுறவு சங்கத்தலைவர் தமிழரசன், ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன்,மாவட்ட பிரதிநிதி ராஜபாண்டி, நிர்வாகிகள் செல்லச்சாமி,மலைச்சாமி,கண்ணதாசன் கலந்து கொண்டனர்.