/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நகராட்சி கமிஷனர் மீது துணை தலைவர் புகார்
/
நகராட்சி கமிஷனர் மீது துணை தலைவர் புகார்
ADDED : ஜூன் 23, 2024 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை நகராட்சி துணை தலைவர் கார்கண்ணன் நகராட்சி நிர்வாகஇயக்குநருக்கு புகார் மனு அளித்துள்ளார்.
மனுவில் கூறியிருப்பதாவது:
கமிஷனர் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருகிறார். வார்டுகளில் பணிகள் செய்து கொடுப்பதில்லை. சிவகங்கை நகராட்சியில் தவறு தலைவிரித்தாடுகிறது. அத்தியாவசிய பணிகள் தேக்கமடைந்துஉள்ளது.சிவகங்கை நகராட்சி பூங்காவில் கோடை திருவிழா என்ற பெயரில் பணிகள் செய்து தேர்தல் நடத்தை விதி முடிந்த அடுத்த நாள் திறக்கப்பட்டுள்ளது.முன்தேதியிட்டு கோப்புகளை தயாரிக்கிறார். கமிஷனர், மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.