ADDED : மே 16, 2024 06:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த கோடைகால பயிற்சியில் பங்கேற்ற 125 மாணவர்களுக்கு சான்று, டி சர்ட் வழங்கினர்.
சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில், தடகளம், கூடைப்பந்து, கோ- கோ, கால்பந்து, ஹாக்கி ஆகிய 5 விளையாட்டுகளில் மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி வகுப்பு நடைபெற்றது. நிறைவு விழாவில் பங்கேற்பு சான்று மற்றும் டி சர்ட் வழங்கப்பட்டது.
மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன் வரவேற்றார். சிவகங்கை கூடுதல் எஸ்.பி., கலைக்கதிரவன் தலைமை வகித்தார். சிவகங்கை அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் மகேந்திரன் மாணவர்களுக்கு சான்றினை வழங்கினர். பயிற்சியாளர் அபுதாகீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.