
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூவந்தி : பூவந்தி மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி மகளிர் கலை கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. முதல்வர் விசுமதி வரவேற்றார்.
கல்லுாரி தாளாளர் அசோக் பட்டமளிப்பு விழாவை தொடங்கி வைத்தார். அழகப்பா பல்கலை கழக துணை வேந்தர் ரவி தர வரிசையில் இடம்பிடித்த 45 மாணவிகளுக்கும், 441 பட்டதாரிகளுக்கும் பட்டங்களை வழங்கினார்.
விழாவில் துணை தலைவர் சிவராமன், துணை செயலாளர் சொக்கலிங்கம், நாடார் உறவின் முறை பொருளாளர் ஸ்ரீதர், பொதுச்செயலாளர் கோடீஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

