/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மருங்கிபட்டியில் கிரிக்கெட் போட்டி
/
மருங்கிபட்டியில் கிரிக்கெட் போட்டி
ADDED : ஆக 05, 2024 10:17 PM
சிவகங்கை, - கல்லல் அருகே மருங்கிப்பட்டியில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி நடந்த மாவட்ட கிரிக்கெட் போட்டியில் தளக்காவூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்து முதலிடம் பிடித்தனர்.
எம்.கே.சி.சி., அணி சார்பில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் 24 அணிகள் பங்கேற்றன. 10 ஓவர்களுக்கென நடந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் தளக்காவூர் அணி, கோவிலுார் அணியுடன் மோதியது. இதில், 6 விக்கெட் இழப்பிற்கு 70 ரன் எடுத்து தளக்காவூர் அணி முதலிடமும், 6 விக்கெட் இழப்பிற்கு 60 ரன் எடுத்து கோவிலுார் அணி 2 ம் இடத்தையும் பிடித்தது. மருங்கிபட்டி அணிக்கும், கல்லல் அணிக்கும் இடையே நடந்த இறுதி போட்டியில் 5 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்து மருங்கிப்பட்டி அணி 3 ம் இடமும், 6 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்து கல்லல் வர்க்கீஸ் அணி 4 ம் இடமும் பிடித்தது.
இறுதி போட்டியை சிவகங்கை எம்.பி., கார்த்தி, காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி ஆகியோர் துவக்கி வைத்தனர். வெற்றி பெற்ற அணிகளுக்கான வெற்றி கோப்பையை தேவகோட்டை டி.எஸ்.பி., பார்த்திபன், கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில பொது செயலாளர் ஆர்.அருள்ராஜ் ஆகியோர் வழங்கினர்.